Editorial / 2018 நவம்பர் 15 , மு.ப. 01:12 - 0 - {{hitsCtrl.values.hits}}

எகிப்தின் ஆதரவுடன் இஸ்ரேலுடனான யுத்தநிறுத்தத்தை காஸாவிலுள்ள பலஸ்தீன போராளிக் குழுக்கள் அறிவித்துள்ளன. இஸ்ரேலும் யுத்தநிறுத்தத்தின்படி நடந்தால், தாங்களும் யுத்தநிறுத்தத்தின்படி நடப்போம் என ஹமாஸ் உள்ளிட்ட போராளிக் குழுக்கள் அறிக்கையொன்றில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளன.
இந்நிலையில், குறித்த அறிவுப்புக் குறித்து இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவோ இராணுவமோ இதுவரையில் கருத்துத் தெரிவிக்காத நிலையில், தாக்குதல்களை நிறுத்துவதற்கு தான் ஆதரவளிக்கவில்லையென கடும்போக்குவாத பாதுகாப்பமைச்சர் அவிக்டோர் லிபர்மான் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்குமிடையிலான 2014ஆம் ஆண்டு யுத்தத்துக்கு பின்னரான மோசமான மோதலாக அமைந்த மோதலில், இஸ்ரேல் நடாத்திய விமானத் தாக்குதல்களில் கட்டடங்கள் தகர்ந்ததுடன், புகை மண்டலமாகக் காணப்பட்டிருந்த நிலையில் 24 மணித்தியாலங்களில் காஸாவில் ஏழு பேர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், காஸாவிலிருந்து ஏறத்தாழ 460 றொக்கெட்டுகளும் மோட்டார்களும் ஏவப்பட்ட நிலையில் தெற்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்த வண்ணம் இருந்த நிலையில் ஆயிரக்கணக்கானனோர் புகலிடம் தேடிய நிலையில் மோசமாகக் காயமடைந்த மூவர் உட்பட 27 பேர் காயமடைந்திருந்தனர்.
இதேவேளை, இஸ்ரேலிய நகரமான அஷ்கெலோனிலுள்ள கட்டடமொன்றை றொக்கெட்டொன்று தாக்கியதில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையைச் சேர்ந்த பலஸ்தீன பணியாளரொருவர் கொல்லப்பட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் விடுத்த அறிக்கையொன்றில், காஸாவில் இராணுவ நடவடிக்கையை நிறுத்துமாறு இஸ்ரேலை எகிப்து கோரியிருந்தது.
இதேவேளை, குறித்த விடயம் தொடர்பாக குவைத், பொலிவியாவின் கோரிக்கையின் பேரில் மூடிய அறைக்குள் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை நேற்று முன்தினம் சந்தித்திருந்தபோதும், எவ்வாறு இந்த நெருக்கடியை அணுகுவது என்பது தொடர்பாக இணக்கம் ஏற்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
தோல்வியில் முடிவடைந்த, காஸாவில் இஸ்ரேலிய சிறப்புப் படைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையிலிருந்தும் அதற்கு பழிவாங்க ஹமாஸ் முற்பட்ட நிலையிலுமே மோதல்கள் ஆரம்பித்திருந்தன. இத்தாக்குதலில், ஹமாஸின் உள்ளூர் இராணுவத் தளபதியொருவர் உட்பட பலஸ்தீனப் போராளிகள் எழுவரும் இஸ்ரேலிய இராணுவ அதிகாரியொருவரும் கொல்லப்பட்டிருந்தனர்.
9 minute ago
24 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
24 minute ago
34 minute ago