2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ஈகுவடாரில் இராணுவ அவசர நிலை பிரகடனம்

Freelancer   / 2025 ஜனவரி 05 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்னமெரிக்க நாடான ஈகுவடாரில், இராணுவ அவசர நிலை பிறப்பித்து, அந்நாட்டு ஜனாதிபதி டேனியேல் நோபோவா உத்தரவிட்டுள்ளார்

 ஈகுவடாரில், பல கிளர்ச்சி குழுக்கள் செயற்படுகின்றன. அவற்றில் பல ஆயுத கும்பலை பயங்கரவாத அமைப்பாக அரசாங்கம் அறிவித்துள்ளது. 

அக்குழுவினர் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துதல்,  பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதால் அரசாங்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர்.

இதன் காரணமாக குவாயாஸ், லாஸ் ரியோஸ், மனாபி உள்ளிட்ட 7 மாகாணங்களில் உள்நாட்டு கலவரம் நிலவுகிறது. எனவே, அந்த மாகாணங்களுக்கு இராணுவ அவசர நிலை பிறப்பித்து, அந்நாட்டு ஜனாதிபதி டேனியேல் நோபோவா உத்தரவிட்டுள்ளார். 

மேலும், 20 மாகாணங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

 இதனால், ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .