2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

ஈக்வடாரில் சோகம்: பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 21 பேர் பலி

R.Tharaniya   / 2025 நவம்பர் 20 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈக்வடாரில் உள்ள குவாரந்தா-அம்பாடோ இடையிலான சாலையில் பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. சிமியாடுக் பகுதியில் மலைப் பாதையில் பயணித்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.

பள்ளத்துக்குள் பேருந்து விழுந்த விபத்தில் 21 பயணிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு மீட்புக் குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த பயணிகள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X