Freelancer / 2026 ஜனவரி 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொருளாதார நெருக்கடியால் ஈரானில் போராட்டங்கள் பரவி வரும் நிலையில், அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானிய அரசு ஊடகங்கள் வெளியிட்ட அவரது உரையில், இந்த அமைதியின்மைக்கு வொஷிங்டன் தான் காரணம் என்று குற்றம் சாட்டிய கமேனி, அகங்காரத்துடன் ஆட்சி செய்யும் தலைவர்கள் தவிர்க்க முடியாமல் வீழ்ச்சியைச் சந்திப்பார்கள் என்று கூறினார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசிய கமேனி, வரலாற்றில் கொடுங்கோலர்களும் அகங்கார ஆட்சியாளர்களும் தங்களது அதிகாரத்தின் உச்சியில் இருந்தபோதே வீழ்ச்சியடைந்ததாகக் கூறினார்.
உலகம் முழுவதையும் ஆணவத்துடன் மதிப்பிடும் அமெரிக்க ஜனாதிபதி, ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், பார்வோன், நிம்ரோத், முகமது ரேசா போன்ற கொடுங்கோலர்களும் அகங்கார ஆட்சியாளர்களும் தங்களது ஆணவத்தின் உச்சியில் இருந்தபோதே வீழ்ச்சியைச் சந்தித்தனர் என்று அயதுல்லா அலி கமேனி கூறினார். (a)
19 minute ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
7 hours ago
9 hours ago