2026 மார்ச் 18, புதன்கிழமை

ஈரானின் மூத்த தளபதி சுலைமானி உயிரிழப்பு

Freelancer   / 2026 மார்ச் 18 , மு.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்​ரேல் தாக்குதலில் ஈரானின் 2 ஆவது மிகப்​பெரிய தலை​வ​ரான அலி லாரிஜானியும் மூத்த தளபதி கோலம்​ரெசா சுலை​மானியும் உயி​ரிழந்​துவிட்டதாக கூறப்படுகிறது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நடத்​திய தாக்​குதலில் ஈரானின் உச்ச தலை​வர் அயத்​துல்லா அலி காமேனி உயி​ரிழந்​தார். இதைத் தொடர்ந்து அவரது மகன் மோஜ்தபா காமேனி புதிய உச்ச தலை​வ​ராக நியமிக்​கப்​பட்​டார். ஆனால் இஸ்​ரேல் போர் விமான தாக்​குதலில் மோஜ்தபா பலத்த காயமடைந்து கோமா​வில் இருப்​ப​தாக​ தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன.

இந்த சூழலில் மறைந்த அயத்​துல்லா அலி காமேனி​யின் வலது கரமாக செயல்​பட்ட அலி லாரிஜானி, ஈரானை வழி நடத்தி வந்ததாகக் கூறப்​பட்​டது. இந்த சூழலில் கடந்த திங்​கள் ​கிழமை நள்​ளிரவு முதல் செவ்​வாய்க்​கிழமை அதி​காலை வரை ஈரான் தலைநகர் டெஹ்​ரானின் முக்​கிய ராணுவ தளங்​களை குறிவைத்து இஸ்​ரேல் போர் விமானங்​கள் குண்​டு​களை வீசி தாக்குதல் நடத்​தின.

இது குறித்து இஸ்​ரேல் பிரதமர் பெஞ்​சமின் நெதன்​யாகு வெளியிட்ட வீடியோ​வில், 

இஸ்​ரேல் வான் வழி தாக்​குதலில் அலி லாரிஜானி கொல்​லப்​பட்​டு​விட்​டார். இவர் இஸ்​லாமிய புரட்​சிகர படை​யின் தலை​வ​ராக இருந்​தார். ஈரான் ராணுவத்​தின் பசிஜ் படைத் தளபதி சுலை​மானி​யும் கொல்​லப்​பட்​டார். இந்த நேரத்​தில் ஈரானின் ஆட்​சியை பொது​மக்​கள் கைப்​பற்ற வேண்​டும் என்றார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X