2026 பெப்ரவரி 25, புதன்கிழமை

ஈரானின் ஹெலிக்கொப்டர் சந்தையில் வீழ்ந்து விபத்து: 4 பேர் பலி

Freelancer   / 2026 பெப்ரவரி 25 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானின் மையப்பகுதியான இஸ்ஃபஹான் மாகாணத்தில் உள்ள டோர்சே நகரில், இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று பழச்சந்தை ஒன்றின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு விமானிகள், இரண்டு வியாபாரிகள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த விபத்து குறித்து ஈரானிய அரசு ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன.

இப்பகுதியில் உள்ள பிரதான இராணுவ விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட இந்த ஹெலிக்கொப்டர், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகக் கட்டுப்பாட்டை இழந்து சந்தைக்குள் விழுந்து தீப்பிடித்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் ஹெலிக்கொப்டரை ஓட்டிச் சென்ற கேணல் ஹமெத் சர்வசாத் மற்றும் துணை விமானி மேஜர் முஜ்தபா கியானி ஆகியோர் பலியாகினர்.

அத்துடன், ஹெலிக்கொப்டர் விழுந்து தீப்பிடித்ததில் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .