Freelancer / 2026 மார்ச் 08 , மு.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த வாரத்தில் ஈரானில் உள்ள 3000 இலக்குகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பதை அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க இராணுவம் தரப்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ‘ஒபரேஷன் எபிக் ஃப்யூரி’யின் மூலம் முதல் வாரத்தில் அமெரிக்கப் படைகள் 3,000 இற்கும் மேற்பட்ட இலக்குகளைத் தாக்கியுள்ளன. நாங்கள் எங்கள் வேகத்தைக் குறைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் டொனால்ட் ட்ரம்ப், நிபந்தனையற்ற சரணடைதலைத் தவிர ஈரானுடன் எந்த ஒப்பந்தமும் இருக்காது. எந்தவொரு ராஜதந்திர பேச்சுவார்த்தைகளும் தொடரும் முன் ஈரான் சரணடைய வேண்டும். அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள், குறிப்பாக இஸ்ரேலும், ஈரான் நாட்டின் தலைமை முழுமையாக மாற்றப்பட்டு சிறந்த மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னரே ஈரானுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது குறித்து பரிசீலிப்போம் என்று ட்ரூத் சமூக வலைதளத்தில் வலியுறுத்தினார். (a)

3 hours ago
07 Mar 2026
07 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
07 Mar 2026
07 Mar 2026