2026 மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை

ஈரானில் 43,000 கட்டடங்கள் சிதைவு

Freelancer   / 2026 மார்ச் 15 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் ஈரான் மீது முன்னெடுக்கப்பட்டு வரும் தாக்குதல்களில், சுமார் 43,000 பொதுமக்கள் குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் சேதமடைந்துள்ளன என ஈரானிய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

அல் ஜசீரா செய்திச் சேவையின் தரவுகளை மேற்கோள்காட்டி, ஈரானிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஃபதேமே மொஹஜெரானி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தாக்குதலுக்குள்ளான கட்டடங்களில் 36,500 வீடுகள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்பு அலகுகள் அடங்குகின்றன. தலைநகரில் மட்டும் சுமார் 10,000 கட்டடங்கள் இலக்கு வைக்கப்பட்டு கடுமையாகச் சேதமடைந்துள்ளன. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X