2026 மார்ச் 25, புதன்கிழமை

ஈரான் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற லெபனான் உத்தரவு

Freelancer   / 2026 மார்ச் 25 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

லெபனானுக்கான ஈரான் தூதுவரை 'விருப்பத்தகாத நபர்'  என அறிவித்துள்ள லெபனான் அரசாங்கம், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் அவரை நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர நெறிமுறைகள் மற்றும் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைகளை ஈரான் தூதுவர் மீறியுள்ளார் என லெபனான் வெளியுறவு அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

தெஹ்ரானின் இத்தகைய செயல்பாடுகள் இருதரப்பு உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் லெபனான் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய கிழக்கில் ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், லெபனான் எடுத்துள்ள இந்தத் தீர்மானம் ஈரான் மற்றும் லெபனான் இடையிலான உறவில் பாரிய விரிசலை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .