Freelancer / 2026 மார்ச் 09 , மு.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரானின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எரிபொருள் சேமிப்பு கிடங்குகளை இலக்காக வைத்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல்களைத் தொடங்கிஉள்ளன. இதைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகள் மீதான தாக்குதலையும் ஈரான் தீவிரப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் படைகள் மற்றும் ஈரான் இடையிலான போர் 9 ஆவது எட்டியுள்ளது. மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது ஈரான் மற்றும் அதன் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தன.
இதற்குபதில் கொடுக்கும் விதமாகவும், ஈரானின் பொருளாதார வலிமையை குறைக்கும் நோக்கிலும் அதன் எண்ணெய் வளங்கள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன.
குறிப்பாக, டெஹ்ரானில் உள்ள 4 எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், கச்சா எண்ணெய் வெளியேறி, சாலைகளில் ஆறாக ஓடித் தீப்பிடித்தது. இதனால், பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 4 லாரி ஓட்டுநர்கள் உயிரிழந்தனர். அதேபோல, லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர்.
செயற்கைக்கோள் புகைப்படங்களின்படி, ஈரானில் பல எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிவதால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்துள்ளது. இதனால், அப்பகுதியே இருளில் மூழ்கியுள்ளதுடன், சுற்றுச்சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. (a)

7 hours ago
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
09 Mar 2026