Editorial / 2024 மே 20 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரானில், ஜனாதிபதி ஒருவர் அவரரு பதவிக்காலத்தில் காலமானால், அரசியலமைப்பின் 131 வது பிரிவின்படி, இடைக்கால ஜனாதிபதி தெரிவு செய்யப்படுவார்.
முதல் துணை ஜனாதிபதியான முகமது மொக்பர், இடைக்கால ஜனாதிபதியாக பதவியை ஏற்கிறார்.
அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் புதிய ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாட்டைக் கண்காணிக்க வேண்டும்.
முதல் துணை ஜனாதிபதி, பாராளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறை தலைவர் ஆகியோரைக் கொண்ட ஒரு கவுன்சிலே இதனை கண்காணிக்கும்.
ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஞாயிற்றுக்கிழமை (20) அசர்பைஜான் சென்றார். அசர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணை திறப்பு விழாற்காக இப்ராகிம் ரைசி சென்றார். அசர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியோவ் உடன் அணை திறப்பு விழாவில் கலந்துகொண்ட இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் மூலம் ஈரான் புறப்பட்டார். அப்போது ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி மரணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 minute ago
30 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
30 minute ago
57 minute ago