2025 நவம்பர் 09, ஞாயிற்றுக்கிழமை

உக்ரைனின் எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா தாக்குதல்

Freelancer   / 2025 நவம்பர் 09 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரைனின் முக்கிய எரிசக்தி மையங்கள் மீது ரஷ்யா மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக, அந்நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின்படி, வடகிழக்கு கார்கிவ் மற்றும் தெற்கு ஒடெசா பகுதிகளில் அமைந்துள்ள எரிசக்தி நிலையங்கள் ரஷ்ய தாக்குதலுக்குள்ளாகியுள்ளன.

குளிர்காலம் ஆரம்பமான நிலையில், இந்த தாக்குதல்கள் இயற்கை எரிவாயு விநியோகத்தையும் கடுமையாகப் பாதித்துள்ளன.

இதனால், மக்கள் தங்களை குளிரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தும் ஹீட்டர்கள் உள்ளிட்ட சாதனங்களை இயக்க முடியாமல் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X