2026 மே 09, சனிக்கிழமை

உக்ரேனுடன் கைகோர்த்த கூகுள்

Ilango Bharathy   / 2022 மார்ச் 14 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

உக்ரேன்  மீது ரஷ்யா கடந்த 24 ஆம் திகதி முதல் தாக்குதல் நடத்தி வருவதால், அந்நாட்டின் மீது  அமெரிக்கா, பிரித்தானிய உள்ளிட்ட பல நாடுகள் அடுக்கடுக்கான பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன.

 மேலும்  புகழ்பெற்ற தொழில்நுட்ப  நிறுவனங்களா  மைக்ரோசொப்ட், அப்பிள், ஐ.பி,எம்  மற்றும் சர்வதேச பணப்பரிவர்த்தனை நிறுவனங்களான விசா மற்றும் மாஸ்டர் கார்ட், அத்துடன் நெட்பிளிக்ஸ், டிக்டொக்‘உள்ளிட்ட பல நிறுவனங்கள் தமது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

அதேசமயம் கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற குளிர்பான நிறுவனங்களும், மெக்டொனால்ஸ்  போன்ற உணவகங்களும் தமது சேவையை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.

அந்த வகையில் கூகுள் நிறுவனம்  உக்ரேனுக்கு உதவும் வகையில் ரஷ்யாவின்  வான்வெளி தாக்குதல் குறித்த எச்சரிக்கையை முன்கூட்டியே அறியும் படியான  அப்டேட் ஒன்றை ஆண்ட்ரொய்ட் பயனாளிகளுக்கு அறிவித்துள்ளது.

இதுக்குறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது ”லட்சக்கணக்கான மக்கள் உக்ரேன் அரசின் வான்வெளி தாக்குதல் குறித்த சைரன்களை நம்பியே பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல இருப்பதால், கூகுள் நிறுவனம் உக்ரேன் அரசுடன் இணைந்து இச் சேவையை வழங்கவுள்ளது” எனத் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .