Freelancer / 2024 மே 08 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

உக்ரைன் அஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கியை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டிய விவகாரத்தில் உக்ரைனின் 2 பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உக்ரைன் அரசின் பாதுகாப்பு பிரிவில் அங்கம் வகிக்கும் அதிகாரிகள் 2 பேர் பணம் பெற்று கொண்டு அதற்கு பதிலாக, உக்ரைனுக்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இருவரில் ஒருவர் பயங்கரவாத செயலுக்கு தயாரான குற்றச்சாட்டும் உள்ளது. இருவர் மீதும் தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவர் ரஷ்ய பாதுகாப்பு பிரிவிடம் இருந்து 2 ஆளில்லா விமானங்களையும் மற்றும் வெடிபொருட்களையும் பெற்றுள்ளார். அவற்றை மற்றொருவருக்கு கொடுத்து, குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது என உக்ரைனின் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில்இ ஜெலன்ஸ்கி மற்றும் பிற மூத்த அதிகாரிகளை படுகொலை செய்ய சதி திட்டம் தீட்டப்பட்ட நிலையில், அதனை முறியடித்து விட்டோம் என்று உக்ரைனின் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். S
27 minute ago
33 minute ago
34 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
33 minute ago
34 minute ago
39 minute ago