Freelancer / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் தலைநகரில் ரஷ்யா நடத்திய வான்வெளி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவ் மீது ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி ரஷ்யா பெரும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், ட்ரோன்கள் ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகளில் விழுந்து, அங்கு தீ விபத்து ஏற்பட்டது. ஹெலிக்கொப்டர்கள் மூலம் தீ அணைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடியிருப்புகளில் காயமடைந்த மக்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்தனர்.
இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். 6 குழந்தைகள் உட்பட 27 பேர் காயமடைந்துள்ளனர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. (a)

03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
03 Feb 2026
03 Feb 2026
03 Feb 2026