Mayu / 2024 மார்ச் 07 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவுக்கு சுற்றுலா சென்ற தாங்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் சேர்க்கப்பட்டு, உக்ரைனுக்கு எதிராக போரிட நிர்ப்பந்திக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த 7 இளைஞர்கள், தங்களுக்கு உதவுமாறு இந்திய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
குறித்த 7 இளைஞர்களில், ஐந்து பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் மற்ற இருவர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி ரஷ்யா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் உதவியாளர்களாக சேர நிர்பந்திக்கப்பட்டுத்தப்பட்டதாகவும்,
மேலும், ரஷ்ய இராணுவத்தில் சேர அவர்களை பொலிஸார் நிர்பந்தித்தாகவும், இல்லையெனில் பத்துவருடம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டி இருக்கும் எனக் கூறியதாகவும் இளைஞர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதற்கு முன்னர், ரஷ்ய இராணுவத்தில் இராணுவ உதவியாளர்களாக சேர்க்கப்பட்ட மூன்று இந்தியர்கள் உக்ரைன் எல்லைப் பகுதியில் துப்பாக்கி ஏந்தி போரிட நிர்பந்திக்கப்பட்டனர் என்று கடந்த பெப்ரவரி 20ஆம் திகதி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
மேலும் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 100 இந்தியர்கள் இதுபோல ரஷ்ய இராணுவத்தால் வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
29 minute ago
38 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
38 minute ago
48 minute ago
2 hours ago