Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜனவரி 22 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எந்த நேரத்திலும் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், உக்ரைன் பிரச்சினையில் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா வரவில்லை என்றால் ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
புட்டினை சந்திப்பது குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து கூறிய அவர்,
"உங்களிடம் திறமை இருந்தால் போர் துவங்கி இருக்காது. நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், உக்ரைனில் போர் நடைபெற்றிருக்காது. ரஷ்யா ஒருபோதும் உக்ரைனுக்குள் சென்றிருக்காது.
“ எனக்கு புட்டினுடன் நல்ல புரிதல் உள்ளது. அது நிச்சயம், நடந்திருக்காது. அவர் பைடனை அவமதித்தார். மிகவும் எளிமை. அவர் மக்களை அவமதிக்கிறார். அவர் புத்திசாலி. அவர் புரிந்துகொள்கிறார். அவர் பைடனை அவமதித்தார்.
"அவர்கள் எப்போது நினைத்தாலும், நான் சந்திக்கிறேன். பல இலட்சம் மக்கள் கொல்லப்படுகின்றனர். இது மிகவும் கொடூரமான சூழ்நிலை, தற்போது அவர்கள் வீரர்கள். பொது மக்கள் அதிகளவில் கொல்லப்பட்டுள்ளனர், நகரங்கள் அழிக்கப்பட்டு இடிபாடு தளங்கள் போல காட்சியளிக்கின்றன," என்று தெரிவித்தார்.
2 minute ago
43 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 minute ago
43 minute ago
55 minute ago