Freelancer / 2022 மார்ச் 02 , பி.ப. 07:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடர்பாக சமூக ஊடக கருத்துகள் குறித்து சீன அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த மோதல் சீன சமூக ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகின்ற நிலையில், உக்ரைனியர்களின் அவலநிலை தொடர்பில் அனுதாபம் தெரிவிப்போரை சிலர் கேலி செய்து, ரஷ்யாவின் ஆக்கிரமிப்பை உற்சாகப்படுத்துகிறார்கள் என்று தெரியவந்துள்ளது.
சில சமூக ஊடக பயன்பாட்டாளர்கள், தப்பியோடிய உக்ரைனியப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறையை ஆதரிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற நகைச்சுவைகள் செய்யும் நபர்களுடன் வெளிப்படையாக வாதிட்டதாக பீய்ஜிங் குடியிருப்பாளரான சென் ஜிங்ஜிங் என்பவர் கூறினார்.
இது ஒரு மோசமான நகைச்சுவை எனவும் இது போரில் பெண்களை மனிதர்களைப் போல நடத்துவதற்குப் பதிலாக பாலியல் வளங்களாக போல நடத்துகிறது எனவும் தன்னால் இதை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, "நியாயமான முறையில் கருத்துக்களை முன்வைக்குமாறு சீன செய்தி நிறுவனமான சின்ஹுவா இணைய பயனாளிகளை வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
09 May 2026
09 May 2026