S.Renuka / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
தற்காலிக தொழில்நுட்பக் கோளாறு சீர்செய்யப்பட்டதையடுத்து, யூடியூப் (YouTube) தளம் தற்போது உலகம் முழுவதும் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளில் யூடியூப் (YouTube) சேவை இன்று புதன்கிழமை (18) திடீரென முடங்கியது.
டவுன்டெக்டர் (Downdetector) தளத்தின் தரவுப்படி, சுமார் 2.4 இலட்சம் பயனர்கள் யூடியூப் செயலியைப் பயன்படுத்துவதிலும், வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்வதிலும் சிக்கல்களைச் சந்திப்பதாகப் புகார் அளித்துள்ளனர்.
குறிப்பாக, வாட்ஸ்அப் போன்ற தளங்களில் வீடியோ லிங்குகள் சரியாக வேலை செய்யவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்தத் திடீர் முடக்கத்தால் ஆயிரக்கணக்கான பயனர்கள் அவதிக்குள்ளாகினர்.
இருப்பினும் கூகுள் நிறுவனம் சேவைகளைச் சீரமைக்கும் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது உலகம் முழுவதும் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .