2025 நவம்பர் 05, புதன்கிழமை

உலகில் உயரமான வாக்குச்சாவடியில் 143 சதவீத வாக்குப்பதிவு

Editorial   / 2019 மே 21 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

இமாச்சலப்பிரதேசம் மாநிலத்தின் தாஷிகேங் பகுதியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி, உலகிலேயே உயரமானது என்று அறியப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் (19) நடந்தத் தேர்தலில், 143 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இமயமலை கிராமத்திலுள்ள வாக்குச்சாவடி மையமானது, கடல்மட்டத்தில் இருந்து 15 ஆயிரத்து 256 அடி உயரத்தில் இருப்பதால், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடி என்ற பெயரை பெற்றிருந்தது.

இங்கு, இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வாக்களித்தனர். வாக்காளர் பட்டியலின்படி, இந்த வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்கள் 49 என்றும் இதில் 36 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இந்த வாக்குச்சாவடியில் 142.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணை ந​டைபெற்ற பின்னரே, தாஷிகேங் வாக்குச்சாவடியில் பணியாற்றிய அலுவலர்கள், பக்கத்து வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் இந்த வாக்குச்சாவடியில் வாக்களித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்தலாம். ஆனால், இங்கு தேர்தல் பணியாற்றிய அலுவலர்கள், உலகின் மிக உயரமான வாக்குச்சாவடியில் தாங்களும் வாக்களிக்க வேண்டும் என்று விரும்பியதால், அதற்கேற்ப தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X