2025 மே 09, வெள்ளிக்கிழமை

உலகை விட்டு பிரிந்த ஜீயஸ்

Freelancer   / 2023 செப்டெம்பர் 20 , பி.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசித்து  வந்த  ஜீயஸ் (Zeus) என்ற நாய், கடந்த 2022 மார்ச் மாதம் 3 அடி 4.18 இன்ச் உயரம் கொண்ட உலகின் உயரமான நாய் என்ற கின்னஸ் சாதனை படைத்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜீயஸிற்கு எலும்பு புற்று நோய் பாதிப்பு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து  ஜீயஸின்  வலது காலை நீக்க மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால் அடுத்த 3 நாட்களில்ஜீயஸ்க்கு சில பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் மருத்துவர்கள் பரிசோதித்ததில் நிமோனியா காய்ச்சல் இருந்ததும், அதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் அதற்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தனது 3 வயதில் ஜீயஸ் உயிரிழந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X