2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

நடிகர் விஜய்க்கு, அமைச்சர் விஜித பதிலடி

Editorial   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கச்சத்தீவு தீவின் உரிமை தொடர்பாக இந்திய மத்திய அரசாலோ அல்லது இராஜதந்திர வழிகள் மூலமாகவோ எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதை வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இன்று (27) மீண்டும் உறுதிப்படுத்தினார்.

அரசாங்க தக​வல் திணைக்களத்தில் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, புதன்கிழமை (27) இடம்பெற்றது. அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது. அது இலங்கைப் பிரதேசம், அது ஒருபோதும் மாறாது. தென்னிந்தியாவில் தற்போது தேர்தல் நடைபெற்று வருகின்றது. மேலும் வேட்பாளர்கள் பெரும்பாலும் வாக்குகளைப் பெறுவதற்காக அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். பிரச்சாரங்களின் போது இதுபோன்ற சொல்லாட்சிகள் வெளிப்படுவது இது முதல் முறை அல்ல, மேலும் அந்தக் கூற்றுக்கள் எதுவும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை, ”என்று அமைச்சர் ஹேரத் கூறினார்.

விஜயின் கருத்துக்களை அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை விட அரசியல் சொல்லாட்சியாகப் பார்க்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார். "இந்திய மத்திய அரசிடமிருந்தோ அல்லது இராஜதந்திர வழிகள் மூலமாகவோ எந்த மாற்றமும் இல்லை. கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதியாகவே நேற்று, இன்று, நாளையும் உள்ளது," என்று அவர் வலியுறுத்தினார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து கேட்டபோது, ​​அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் மதிப்பாய்வில் உள்ளன அந்த ஒப்பந்தங்கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது, மேலும் ஒரு ஆன்லைன் மனுவும் நடந்து வருகிறது. சட்ட செயல்முறை முடியும் வரை நாம் காத்திருக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .