Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 16 , பி.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆண்கள், பெண்களுக்கு சவால் விடும் வகையில் திருநங்கைகளும் ஒவ்வொரு துறையிலும் சாதித்து வருகின்றனர். இந்நிலையில் அழகி போட்டி வரலாற்றில் முதன் முறையாக 2 திருநங்கைகள் பங்கேற்க உள்ளனர்.
72-வது உலக அழகி போட்டி இந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 90 அழகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இவர்களுக்கு போட்டியாக 2 திருநங்கைகளும் களம் இறங்கி உள்ளனர். அதில் ஒருவரது பெயர் மெரினா மஷேடி (23) இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். கடந்த வாரம் நடந்த மிஸ் போர்ச்சுக்கல் அழகி போட்டியில் இவர் வெற்றி பெற்று பட்டம் வென்றார்.
மற்றொரு திருநங்கை பெயர் ரிக்கி கோலே. நெதர்லாந்து நாட்டை சேர்ந்த மாடல் அழகி ஆவார். அவர் ஜூலை மாதம் நடந்த அழகி போட்டியில் மிஸ் நெதர்லாந்து அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் மிஸ் நெதர்லாந்து பட்டம் வென்ற முதல் திருநங்கை என்ற பெருமையை பெற்றார்.
உலக அழகி போட்டியில் கலந்து கொள்ளும் 2 திருநங்கைகளில் யாராவது ஒருவர் வெற்றி பெற்று மகுடம் சூட்டினால் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் திருநங்கை என்ற சாதனையை படைக்கலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
27 minute ago
33 minute ago
59 minute ago