2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இராணுவ முகாம்களை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் காணப்படும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு வலியுறுத்தி பருத்தித்துறையில் நேற்று (25) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

'பருத்தித்துறை நகரை பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் பருத்தித்துதறை நகரில் உள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி பருத்தித்துறை நகர பிதா டக்ளஸ் போல் தலைமையில் நேற்று கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை துறைமுகப்பகுதியில் அமைந்துள் இராணுவ முகாம், வெளிச்சவீட்டை ஆக்கிரமித்து அமைந்துள்ள கடற்படை முகாம் என்பன போருக்கு பின்னரான நகரின் வளர்ச்சிக்கு பாரிய தடைக்கல்லாக உள்ளது.

பருத்தித்துறை நகரின் வளர்ச்சி கருதியும் பருத்தித்துறை வாழ் மக்களின் நன்மைகருதியும் மேகுறித்த இராணுவ, கடற்படை முகாம்களை அகற்றித்தருமாறு வலியுறுத்தி குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி இட்ம்பெற்றுள்ளது. (a)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X