2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஊடகவியலாளரின் அனுமதியை இடைநிறுத்தியது ட்ரம்ப் நிர்வாகம்

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்திகளைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவருக்கான அனுமதியை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் நிர்வாகம், இடைநிறுத்தி வைத்துள்ளது. ஜனாதிபதியின் கடுமையான கேள்விகளைக் கேட்பதன் காரணமாகவே, இந்நிலை ஏற்பட்டுள்ளது.

சி.என்.என் ஊடகத்தைச் சேர்ந்த ஜிம் ஒகஸ்டா என்ற அந்த ஊடகவியலாளர், மத்தியகாலத் தேர்தலைத் தொடர்ந்து நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்ட கேள்விகளே, ஜனாதிபதி ட்ரம்ப்பைக் கோபப்படுத்தியிருந்தன.

ஐ.அமெரிக்காவை நோக்கி, மத்திய அமெரிக்க நாடுகளிலிருந்து வரும் குடியேற்றவாசிகளைத் தொடர்ச்சியாக விமர்சித்து வந்த ஜனாதிபதி ட்ரம்ப், நாட்டை நோக்கி அவர்கள் படையெடுத்து வருகிறார்கள் எனக் கூறிவந்தார்.

இந்நிலையில், குடியேற்றவாசிகள் மீதான அவரது இவ்வெறுப்பைச் சுட்டிக்காட்டி, எதற்காக அவர்கள் வருவதை, “படையெடுப்பு” என்று ஜனாதிபதி அழைக்கிறார் என, ஊடகவியலாளர் ஜிம் கேட்டிருந்தார்.

அதைத் தொடர்ந்து, “அது போதும்” எனத் தெரிவித்த ஜனாதிபதி, ஊடகவியலாளரைப் பார்த்த, “மதிப்பற்ற, மோசமான மனிதர்” எனவும், “மக்களின் எதிரி” எனவும் வர்ணித்தார்.

அப்போது, வெள்ளை மாளிகையின் பணியாளர் ஒருவர், ஊடகவியலாளரின் ஒலிவாங்கியையும் பறிக்க முயன்றிருந்தார்.

அப்பணியாளர் ஒரு பெண் என்பதோடு, ஊடகவியலாளர் ஜிம்மின் ஊடக அனுமதி இடைநிறுத்தப்படுகிறது என்பது தொடர்பான அறிக்கையை வெளியிட்ட வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் சாரா சான்டர்ஸ், அப்பெண்ணை, ஊடகவியலாளர் ஜிம், தொட்டிருந்தார் என்ற ரீதியில், தவறாகக் குற்றஞ்சாட்டியிருந்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X