Ilango Bharathy / 2022 மார்ச் 08 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
உக்ரேன் மீது ரஷ்யா தொடர்ந்து 12 ஆவது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்ட பல தடைகளை விதித்து வருகின்றன.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து ‘கச்சா எண்ணெய்‘ இறக்குமதிக்குத் தடை விதிப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் கனடா வின் பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்”, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்யால் அந்நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் லாபம் அடையக்கூடும் . அதனால் ரஷ்யா பலனடையும் என்றும் கூறினார்.
மேலும் சர்வதேச அளவில் ரஷ்யாவை தனிமைப்படுத்த எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதுமட்டுமின்றி உக்ரேனுக்கு ஆதரவாக ஆயுதங்கள், வெடி மருந்துகளை அனுப்ப இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை தடை செய்வது தொடர்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
9 hours ago