Janu / 2026 மே 19 , பி.ப. 01:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொங்கோ குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா வைரஸ் தொற்றினால், இதுவரையில் 100 பேர் உயிரிழந்துள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (Africa CDC) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, எபோலா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 400-ஐக் கடந்துள்ளது. அத்துடன், கொங்கோவின் அண்டை நாடான உகாண்டாவிலும் தற்போது எபோலா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படத்ங்கியுள்ளதாக ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் குறிப்பிட்டுள்ளது. இந்த எபோலா பரவல் காரணமாக, கொங்கோ உடனான எல்லையை மூடுவதற்கு உகாண்டா தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தற்போது கொங்கோவில் பரவி வருவது எபோலா வைரஸின் மிகத் தீவிரமான 'புந்திபுகியோ' (Bundibugyo) எனப்படும் உருமாறிய வடிவமாகும் (Variant). இந்த ஆபத்தான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆப்பிரிக்க பிராந்தியத்தின் மீது கூடுதல் கவனம் செலுத்தி, சர்வதேச அளவிலான சுகாதார அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது.

18 minute ago
23 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
23 minute ago
33 minute ago
42 minute ago