Freelancer / 2023 ஜூலை 31 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
லண்டன், ஐரோப்பிய செயற்கைக்கோள் ஒன்று அட்லாண்டிக் பெருங்கடலில் விழுந்துள்ளது. ஏயோலஸ் (Aeolus) என்று பெயரிடப்பட்ட இந்த செயற்கைக்கோள் 1,360 கிலோகிராம் எடையுள்ள வானிலை கண்காணிப்பு செயற்கைக்கோள் ஆகும். இது 2018ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது. இதில் டாப்ளர் விண்ட் லிடார் எனப்படும் அதிநவீன லேசர் கருவியை கொண்டுள்ளது.
இது வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் காலநிலை மாதிரிகளை மேம்படுத்த, ஐரோப்பா முழுவதும் வானிலை மையங்களுக்கு தரவுகளை வழங்கி ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது. ஏயோலஸ் செயற்கைக்கோளில் கடந்த மே மாதம் எரிபொருள் தீர்ந்ததால், அதன் சுற்றுப்பாதையை பராமரிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) விண்வெளியில் உள்ள மற்ற விண்கலம் அல்லது செயற்கைக்கோளுடன் மோதும் அபாயத்தை குறைக்க செயற்கைக்கோளை வேண்டுமென்றே கடலில் மோத செய்தாக கூறப்படுகிறது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025