Editorial / 2019 மே 23 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் சிறைதண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவரின் விடுதலை குறித்து சட்ட நிபுணர்களின் முழுமையான ஆலோசனையின் பின்னர், ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில், 28 வருடங்களாக சிறையில் உள்ள எழுவரின் விடுதலை குறித்து, தமிழக அரசாங்கம் அமைச்சரவையை கூட்டி தீர்மானித்திருந்தது. குறித்தத் தீர்மானத்தின்படி இவர்களின் விடுதலையை தீர்மானிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டது. அத்தோடு எழுவரின் விடுதலைக் குறித்து சிறந்த தீர்மானமொன்றை எடுக்கவேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தொடர்ந்தும் மௌனம் காத்து வருகிறார்.
இந்நிலையில், இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், தமிழகம் சாராத ஏனைய மாநில சட்ட நிபுணர்களின் கருத்தை பெறவேண்டும் என்றும் அதன் அடிப்படையில் எழுவரின் விடுதலைக் குறித்து தீர்மானிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, இந்த விவகாரம் குறித்து தமிழக அரசாங்கம் சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டாலும், மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு எழுவரின் விடுதலைக்கு எதிராகவே காணப்படுவதாக கூறப்படுகிறது.
அதேநேரம், இவர்களின் விடுதலை இந்தியா - இலங்கைக்கு இடையிலான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் காணப்படுகிறது. ஏனெனில் குறித்த 7 பேரில் 4 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், இவர்களின் விடுதலைக் குறித்து இலங்கை அரசாங்கம் எவ்வித தீவிரமும் காட்டவில்லை என்றும் அரசியல் ஆர்வலர்கள் விமர்சித்துள்ளனர்.
எனவே, சட்ட நிபுணர்களின் முழுமையான ஆலோசனைக்குப் பிறகே ஆளுநர் தீர்மானிப்பார் என, அரசியல் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago