2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஏழைகளை ’ஏழைகளாக்கி ஆட்சி’

Editorial   / 2019 மே 08 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து ஆட்சி செய்கின்றனர் என்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளனர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து, 2ஆவது நாள் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நாகமலை புதுக்கோட்டை, தனக்கன்குளம், சீனிவாச நகர் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

திருப்பரங்குன்றம் மலையை ஏலம் விட்டனர் என்னும் தடுத்திருக்காவிட்டால், மலை காணாமல் போயிருக்கும் என்றும் கூறிய அவர், நல்ல கட்சிக்கு வாக்களிக்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தான் தலைவர் இல்லை என்றும் மக்களே தலைவர்கள் என்றும் தெரிவித்ததோடு, மக்களுக்காக தான் கடன் பட்டுள்ளதாகவும் தனது எஞ்சிய வாழ்க்கை, தமிழக மக்களுக்குத்தான் என்றும் எனவே, டோச் லைட்டுக்கு வாக்களிக்குமாறும் அவர் கோரினார்.

தமிழகத்தில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகம் பாலைவனம் போல் இருப்பது மாதிரியும் நீரை தமிழகத்துக்குக் கொண்டு வரமுடியாததுபோல, ஆட்சியாளர்கள் நாடகமாடி வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால், வீட்டுக்கு வீடு குழாய் அமைத்து தண்ணீர் தர முடியும் என்றும் பல கட்சிகள் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாகவும் வாக்குப் பணம் வாங்குவது, நம் தலையில் மண்ணை வாரி போட்டுக்கொள்வதைப் போல் ஆகிவிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X