Freelancer / 2022 மே 14 , பி.ப. 06:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய ஜனாதிபதியாக ஷேக் முகம்மது பின் செய்த் அல் நஹ்யான் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் 3ஆவது ஜனாதிபதியாக 61 வயதான ஷேக் முகம்மது பின் செய்த் அல் நஹ்யான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது ஜனாதிபதியான ஷேக் கலீபா பின் செய்த் அல் நஹ்யான் (வயது 73) கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று மதியம் அபுதாபி ஜனாதிபதி அரண்மனையில் காலமானார்.
இவரது மறைவை அடுத்து ஓமான், சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியா, சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தன.
வெள்ளிக்கிழமை முதல் அரைக்கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்படுவதுடன், 40 நாட்கள் துக்க தினத்தை அமீரகம் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
41 minute ago
2 hours ago