2026 மே 09, சனிக்கிழமை

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைகிறது உக்ரேன்

Freelancer   / 2022 மார்ச் 03 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் முயற்சிகளில் உக்ரேன் ஈடுபட்டு வந்தது.  அதற்கான விண்ணப்பத்தில் உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்சி திங்கள் கிழமையன்று கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் உரையாற்றினார்.  

உக்ரேன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள், எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள். எங்களை போக விட மாட்டீர்கள் என்பதை நிரூபியுங்கள். நீங்கள் உண்மையிலேயே ஐரோப்பியர்கள் என்பதை நிரூபியுங்கள்.அப்போதுதான் மரணத்தை வாழ்க்கை வெல்லும். என்றார். 

அவரது உரை முடிந்தவுடன் அங்கிருந்த உறுப்பினர்கள் கைதட்டி பலத்த கரகோஷம் எழுப்பினர். இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடாக உக்ரேனின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக ஐரோப்பிய பாராளுமன்றம் அறிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .