2021 ஜூலை 31, சனிக்கிழமை

’ஐ. அமெரிக்க படைகளைக் கொண்டிருந்த தளத்தை றொக்கெட்டுகள் தாக்கின’

Editorial   / 2020 ஜனவரி 13 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக் தலைநகர் பக்தாத்துக்கு வடக்காகவுள்ள, ஐக்கிய அமெரிக்க படைகளைக் கொண்டிருக்கின்ற ஈராக்கிய வான் தளத்தை றொக்கெட்டுகள் தாக்கியதாகவும் உள்ளூர்ப்படைகளை காயமடையச் செய்ததாகவும் ஈராக்கிய இராணுவம் நேற்று தெரிவித்துள்ளது.

அல்-பலாட் வான் தளத்தில் கட்யுஷா ரக றொக்கெட்டுகள் எட்டு தரையிறங்கியதாகவும், ஈராக்கிய அதிகாரிகள் இருவரையும், வான் படையினர் இருவரையும் காயப்படுத்தியதாகவும் ஈராக்கிய இராணுவத்தின் அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய அமெரிக்காவிலிருந்து வாங்கப்பட்ட ஈராக்கின் எஃப்-16 விமானங்களுக்கான பிரதான வான் தளம் அல்-பலாட் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தளத்தில் ஐக்கிய அமெரிக்க வான் படையின் சிறியளவானோரும், ஐக்கிய அமெரிக்க ஒப்பந்தப் பணியாளர்களும் உள்ளபோதும், ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரானிடையே கடந்த இரண்டு பதற்றங்களையடுத்து பெரும்பாலோனோர் வெளியேற்றப்பட்டதாக இராணுவத் தகவல் மூலங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்கா, ஏனைய தூதரகங்களும், சர்வதேசப் படைகளுமுள்ள பக்தாத்தின் உயர் பாதுகாப்பு பச்சை வலயத்துக்கெதிரான றொக்கெட் தாக்குதல்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .