Shanmugan Murugavel / 2022 ஜனவரி 27 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

தென் சீனக் கடலில், ஐக்கிய அமெரிக்க விமானந் தாங்கிக் கப்பலொன்றின் தளத்தில் எஃப்-35 ஜெட் விபத்துக்குள்ளான நிலையில் அந்த ஜெட்டின் விமானி வெளியேற்றப்பட்டதுடன், எழுவர் காயமடைந்ததாக ஐக்கிய அமெரிக்க பசுபிக் கப்பற் படை அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
வழமையான பறப்பு நடவடிக்கைகளில் விமானி ஈடுபட்டிருந்தபோது விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கப்பற் தளத்தில் சேதம் மேலோட்டமானது எனவும், கப்பலானது அதன் வழமையான நடவடிக்கைகளை ஆரம்பித்ததாகவும், விமானமானது மீட்புப் பணியில் உள்ளதாக ஜப்பானிலுள்ள ஐ. அமெரிக்க கடற்படையின் ஏழாவது கப்பற் தொகுதியின் பேச்சாளர் லெப்டினன்ட் மார்க் லங்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago