Editorial / 2019 செப்டெம்பர் 19 , பி.ப. 04:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை உறுப்பினர் ப. சிதம்பரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை காவல் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவருடைய மகனும் இந்திய நாடாளுமன்ற கீழவை உறுப்பினரான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது இந்திய மத்திய விசாரணை நிறுவகமும் (சி.பி.ஐ), அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.
சி.பி.ஐ தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் முன்பிணை மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 20ஆம் திகதி தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, மறுநாள் டெல்லியிலுள்ள அவரது இல்லத்தில் கைது செய்தது.
ப. சிதம்பரத்தை இம்மாதம் ஐந்தாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று ப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிந்து, சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ப. சிதம்பரத்துக்கு அடுத்த மாதம் மூன்றாம் திகதி வரை சிறைக்காவலை நீட்டித்து உள்ளது.
18 minute ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
04 Nov 2025