Editorial / 2019 ஓகஸ்ட் 25 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் IS அமைப்புடன் தொடர்புடைய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீவிரவாத செயலில் ஈடுபடுவதற்காக IS அமைப்பிமிருந்து நிதி பெற்று அவர்களுக்கு உதவியதாக பால்ராம் சிங், பாகவேந்த்ரா சிங், சுபம் திவாரி, சுனில் சிங் மற்றும் ஒரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மத்திய பிரதேசத்தில் தீவிரவாத செயலில் ஈடுபட்டு வரும் ஐ எஸ் அமைப்பிற்கு நிதி பெற்று வந்துள்ளனர்.
இதில் பால்ராம் என்பவர் ஏற்கெனவே தொலைபேசி தொலைதொடர்பை சட்டவிரோதமாக நடத்தியதாக 2017ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலையானவர்.
மேலும் மற்றுமொருவர், கொள்ளை வழக்கில் கைதாகி பிணையில் வெளிவந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்பட்ட ஐவரிடமும் இந்திய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-இந்திய ஊடகங்கள்
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago