2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

ஒடிசாவில் 52 பேர் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 18 , மு.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 52ஆக உயர்வடைந்துள்ளது.

டிட்லி புயல் காரணமாக, கடந்த 11ஆம் திகதி முதல், ஒடிஷாவின் பல பகுதிகளிலும், கடுமையான மழை பெய்துவருவதோடு, அதனால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தவிர, மண்சரிவு, மரங்கள் முறிந்து விழுதல் ஆகியவற்றால், அம்மாநிலம் பாதிப்படைந்துள்ளது.

உயிரிழப்புகளைத் தவிர, வெள்ளம் காரணமாக, சுமார் 2.2 பில்லியன் இந்திய ரூபாய் அளவுக்குச் சேதம் ஏற்பட்டுள்ளதெனக் கணிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X