2026 மார்ச் 04, புதன்கிழமை

ஒரு சொட்டு எண்ணெய் இல்லை; உலகத்துக்கே செக் வைத்த ஈரான்

S.Renuka   / 2026 மார்ச் 03 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய கிழக்கில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மூடிவிடுவதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் மூத்த தளபதி பிரிகேடியர் ஜெனரல் இப்ராகிம் ஜப்பாரி இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

ஈரானிய ஊடகங்களில் பேசிய அவர், "ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்ல முயலும் எந்தவொரு கப்பலும் தீயிட்டு கொளுத்தப்படும்.

இங்கிருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளியேற அனுமதிக்க மாட்டோம். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம்.

கச்சா எண்ணெய் விலை வரும் நாட்களில் பேரலுக்கு 200 டாலர் வரை உயரும்" என்று பாக்கிறிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் தேவையில் ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 20% இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.

தினமும் சுமார் 2 கோடி பேரல் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இதன் வழியாகக் கொண்டு செல்லப்படுகிறது.

சவூதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் தங்கள் ஏற்றுமதிக்கு இந்தப் பாதையையே நம்பியுள்ளன.

கத்தார் தனது இயற்கை எரிவாயு ஏற்றுமதியை முழுமையாக இதன் வழியாகவே செய்கிறது. எனவே, இவை அனைத்தும் கடுமையாக பாதிக்கப்படும். 

கச்சா எண்ணெய் தட்டுபாடால் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .