Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Freelancer / 2023 ஜூலை 23 , பி.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே நேரத்தில் கணவரையும், அவரது தந்தையையும் ஒரு பெண் திருமணம் முடித்துள்ளார். இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. விருந்து, இசை நிகழ்ச்சிகளுடன் ஏராளமான பொருட்செலவில் தற்காலத்தில் திருமணங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றில் குழப்பங்களுக்கும் பஞ்சம் இருக்காது.
அந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிம் என்பவர் ஒரே நேரத்தில் 2 நபர்களை திருமணம் முடித்துள்ளார். ஒருவர் அவருக்கு நிச்சயம் பேசி முடிக்கப்பட்ட ஆண். மற்றொருவர் அந்த ஆணின் தந்தை.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து சுவாரசிய தகவல்கள் வெளிவந்துள்ளன. திருமண வழக்கப்படி அதற்கு சாட்சியாக 2 நபர்களின் கையெழுத்து தேவை. அதில் ஒன்றை கிம்மின் தாயார் பதிவிட்டுள்ளார். இன்னொரு கையெழுத்தை மணமகனின் தந்தை போட்டுள்ளார். இங்குதான் குழப்பம் நடந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது சாட்சி கையெழுத்து பதிவிட வேண்டிய இடத்திற்கு பதிலாக மணமகன் என்ற இடத்தில் அவருடைய தந்தை கையெழுத்து போட்டுள்ளார். திருமண சான்றிதழ் அடிப்படையில் 2 நபர்களை கிம் திருமணம் முடித்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் நல்ல வேளையாக திருமணம் தொடர்பான சட்டப் பத்திரத்தில் தவறு ஏதும் நடக்கவில்லை. இந்த ருசிகர சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
14 May 2025
14 May 2025
14 May 2025