2026 மே 09, சனிக்கிழமை

ஒரே நேரத்தில் 81 பேருக்கு மரண தண்டனை

Ilango Bharathy   / 2022 மார்ச் 13 , பி.ப. 02:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சவூதி அரேபியாவில்  நேற்று   (12)  ஒரே  நேரத்தில் 81 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவில் குற்றச்செயல்களுக்குக் கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக சர்வதேச அளவில்  அதிகளவான  மரண தண்டனைகளை  விதிக்கும் நாடுகளில் ஒன்றாகவும் சவூதி  இருந்து வருகின்றது.

அத்துடன் அங்கு கொலை, தீவிரவாத செயல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கே  மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்   நேற்றுமுன்தினம் (12) 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

இது கடந்த ஆண்டு முழுவதும் அங்கு நிறைவேற்றப்பட்ட மொத்த மரண தண்டனைகளை விட அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அத்துடன்  தண்டனை நிறைவேற்றப்பட்ட அனைவரும் பல கொடூரமான குற்றங்களைச் செய்தவர்கள் எனவும், அவர்களில் பலர் பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ்., அல்கொய்தா, யேமனின் ஹுதி கிளர்ச்சிப் படைகள் தொடர்புடைய மற்றும் அவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட குற்றவாளிகள் என்று சவூதி அரசு தெரிவித்துள்ளது. 

மேலும் குறித்த 81 பேரில் 73 பேர் சவூதியைச் சேர்ந்தவர்கள் எனவும், 7 பேர் ஏமனைச்  சேர்ந்தவர்கள் எனவும் ஒருவர் சிரியாவைச்  சேர்ந்தவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .