2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

காசாவின் மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்

Freelancer   / 2025 டிசெம்பர் 22 , மு.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட காசாவின் மேற்கு கரையில் 19 புதிய யூத குடியிருப்புகளை நிறுவுவதற்கு இஸ்ரேலிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
 
இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் நிறுவப்பட்ட புதிய குடியிருப்பு பகுதிகளின் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பலஸ்தீனம் அமைந்துள்ளது.
 
மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் இஸ்ரேல், உலக எதிர்ப்புகளை மீறி மேற்கு கரையில் புதிய குடியிருப்புகளை அமைத்து வருகிறது.
 
இந்த புதிய குடியேற்றங்களில் 2005 ஆம் ஆண்டு விலகல் திட்டத்தின்போது வெளியேற்றப்பட்ட இரண்டு குடியேற்றங்களும் அடங்குகின்றன.
 
இதனையடுத்து புதிய குடியிருப்பு பகுதிகளின் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.

அதேநேரம் கடந்த 2022 ஆம் ஆண்டு மேற்கு கரையில் 141 ஆக இருந்த யூத குடியிருப்பு எண்ணிக்கை, தற்போது 210 ஆக உயர்ந்துள்ளது. (a) 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X