2025 டிசெம்பர் 04, வியாழக்கிழமை

கடும் பனிப்புயலால் 5.5 கோடி பேர் பாதிப்பு

S.Renuka   / 2025 டிசெம்பர் 04 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள கடும் பனிப்புயல் காரணமாக சுமார் 5.5 கோடி பேர் பாதிப்படைந்துள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அமெரிக்காவில் நவம்பர் முதல் மார்ச் வரை குளிர்காலம் இருக்கும். அந்த சமயத்தில் கடும் பனிப்புயல்கள் தாக்கும். இந்த நிலையில் அமெரிக்காவில் பனிப்புயல் தாக்கி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பனிப்புயல்கள் தாக்கின. தற்போது 3ஆவது பனிப்புயல் உருவாகி இருக்கிறது. இந்த புதிய பனிப்புயல் அதி தீவிர பனிப்புயலாக மாறி உள்ளது.

இந்த அதி தீவிர பனி புயலால் 5.5 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொலராடோ மாகாணத்தின் ராக்கி மலைப்பகுதியில் ஒரு அடி உயரத்திற்கு பனி விழுந்துள்ளது. கன்சாஸ் சிட்டியில் 10 செ.மீ., அளவும், செயின்ட் லுாயிசில் 7 செ.மீ., அளவும் பனி பதிவாகியுள்ளது.

அமெரிக்காவின் வடமேற்கில் மோண்டானா முதல் கிழக்கு கடற்கரையில் உள்ள மைனே வரை 2,500 கி.மீ., நீளத்துக்கு 27 மாகாணங்களுக்கு அதிதீவிர பனிப்புயல் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X