Freelancer / 2023 ஜூலை 19 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்திரேலியாவின் கடற்கரை பகுதியில் ஒதுங்கிய மர்ம பொருள் இந்திய ரொக்கெட் இயந்திரமாக இருக்கலாம் என ஐரோப்பிய விண்வெளி நிறுவன பொறியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
அஸ்திரேலியாவின் பெர்த் நகருக்கு வடக்கே 250 கி.மீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. ஒரு சிறிய கார் அளவுக்கு உருண்டையாக இருக்கும் அந்த பாகம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ரொக்கெட் இயந்திரத்தின் பாகமாக இருக்கலாம் என அஸ்திரேலிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக அஸ்திரேலிய விண்வெளி நிறுவனம், வெளிநாடுகளைச் சேர்ந்த விண்வெளி நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய விண்வெளி முகமையின் பொறியாளர் ஆண்ட்ரியா பாய்ட், அஸ்திரேலிய கடற்கரையில் ஒதுங்கிய பாகம் இந்திய ரொக்கெட்டின் மேல் அடுக்கு இயந்திரம் போல் தெரிகிறது என தன்னுடன் பணியாற்றுபவர்கள் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago