Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2022 மார்ச் 26 , பி.ப. 07:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
அணு ஆயுதங்களைப் பற்றிய ரஷ்யாவின் தற்பெருமை, ஆபத்தான ஆயுதப் போட்டியைத் தூண்டுகிறது என, உக்ரைன் ஜனாதிபதி விலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
கட்டார் தலைநகர் டோஹாவில் சர்வதேச அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களின் வருடாந்த கூட்டத்தில் காணொளி வாயிலாக கலந்துகொண்டு பேசிய போதே இந்த விடயத்தை அவர் தெரிவித்தார்.
எரிசக்தியை ஆயுதமாகப் பயன்படுத்தும் ரஷ்யாவின் முயற்சிகளை எதிர்கொள்வதற்கு, கட்டார் இயற்கை எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
“ஒரு குறிப்பிட்ட நாட்டை மட்டுமின்றி முழு உலகையும் அணு ஆயுதத்தால் அழிக்க முடியும் என்று தற்பெருமை பேசுகிறார்கள். 1990களில் உக்ரைன் தனது அணுசக்தி கையிருப்பை அகற்றியபோது ரஷ்யா உட்பட உலகின் மிகவும் சக்திவாய்ந்த நாடுகள் பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கின“ என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
49 minute ago
53 minute ago
3 hours ago