2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கண்ணீரால் வரவேற்கும் மக்கள்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையே கடந்த 8 மாதங்களுக்கு மேலாகப்  போர் இடம்பெற்று வருகின்றது.

இப்போரில் உக்ரேனின் பெரும்பாலான பகுதிகளை  ரஷ்யப்  படைகள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்மைக்காலமாகக்  கைப்பற்றிய பகுதிகளை ரஷ்ய அரசு தம்முடன்  இணைத்து வருகின்றது.

அதுமட்டுமல்லாது உக்ரேனின்  கெர்சோன் நகருக்குள்  புகுந்த ரஷ்ய இராணுவத்தினர், அங்குள்ள வீடுகளை ஆக்ரமித்துடன் பொருட்களை கொள்ளை அடிப்பதாகவும், பொதுமக்களை காலி செய்யுமாறு உத்தரவிட்டு வருவதாகவும் உக்ரேன் குற்றம் சாட்டி இருந்தது.

ரஷ்யாவின் இச் செயல் சர்வதேச சட்டத்தை மீறும் செயலாக உள்ளது என   உலக நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.

இதனையடுத்து கெர்சோன் விட்டு தமது படைகளை வெளியேறுமாறு ரஷ்ய அரசு அண்மையில் உத்தரவிட்டதைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் வெளியேறின.

இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் கடந்த சிலநாட்களாக அதிகளவில் வருகை அங்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த உக்ரேன் இராணுவ வீரர்களை, அப்பகுதி மக்கள் கட்டி அணைத்தும், பூங்கொத்து கொடுத்தும் கண்ணீர் மல்க வரவேற்றுள்மை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X