Editorial / 2019 ஜூலை 28 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகதிகளைக் காவிச் சென்ற மரத்திலான படகொன்று கவிழ்ந்தைத் தொடர்ந்து தற்போது வரையில் 55 சடலங்கள் லிபியக் கரையோரத்தில் மீட்கப்பட்டுள்ளதாக தொண்டுப் பணியாளரொருவர் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன ஏனைய அகதிகளைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தொடர்வதாக லிபிய செம்பிறைச் சங்க உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.
அந்தவகையில், இவ்வாண்டில் மத்தியதரைக் கடலில் ஏற்பட்ட மோசமான சம்பவம் இது என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ள நிலையில், எத்தனை பேர் படகில் இருந்தார்கள், எத்தனை பேரை இன்னும் காணவில்லை மற்றும் கடலில் மூழ்கியதாக அஞ்சப்படுகிறார்கள் என்பது தெளிவில்லாமலுள்ளது.
பெரும்பாலாக சஹாரா பாலைவனத்துக்கு தெற்காகவுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய 350பேரைக் காவிய நிலையிலேயே லிபியத் தலைநகர் திரிபோலிக்கு கிழக்காக 120 கிலோ மீற்றர் தூரத்திலுல்ள கொமஸ்ஸுக்கருகே படகு மூழ்கியதாக செம்பிறைச்சங்க உறுப்பினர் அப்டுல்மெனம் அபு சபை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், 250 பேர் படகிலிருந்ததாக லிபியக் கடற்படை கடந்த வியாழக்கிழமை தெரிவித்த நிலையில், 150 பேர் வரையில் இறந்திருக்கலாம் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் கூறியிருந்தது.
லிபியக் கரையோரக் காவற்படையினரும், உள்ளூர் மீனவர்களுமாக 134 அகதிகளை கடந்த வியாழக்கிழமை மீட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
28 minute ago
35 minute ago