2025 நவம்பர் 05, புதன்கிழமை

’கமலும் ஒரு இந்து தீவிரவாதிதான்’

Editorial   / 2019 மே 20 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனே, ஒரு இந்து தீவிரவாதிதான் என்று, இயக்குநர் கௌதமன், பரபரப்பாகக் கருத்து வெளியிட்டுள்ளார்.

அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து எனத் தெரிவித்ததையடுத்து, கமல்ஹாசன், இந்துக்களுக்கு எதிராக பேசியதாக சர்ச்சை எழுந்தது.

இந்த நிலையில், இயக்குநர் கெளதமன், கமல்ஹாசனே ஒரு இந்து தீவிரவாதிதான் என்றும் கமலை முக்கிய தலைவராக்கவே, அவரது கருத்துக்கு மோடி பதிலளித்துள்ளார் என்றும் கூறியுள்ளார்.

விவசாயிகளின் போராட்டத்தை மறைக்கவே, கோட்சே குறித்து கருத்து கூறப்பட்டுள்ளது என்று கூறிய அவர், கோட்சே இந்து தீவிரவாதி என கமல் கூறியது, பிக்பாஸ் போல் ஒரு நாடகம் ஆகும் என்றும் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X