Editorial / 2019 மே 14 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி, ஒரு இந்து என, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியமைக்கு, பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், மகாத்மாவின் படுகொலையை, இந்து தீவிரவாதம் என தேர்தல் பரப்புரைகளில் பேசுவது விஷமத்தனமானது மட்டுமன்றி ஆபத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மத உணர்வுகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கமல் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியிருப்பது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago