Editorial / 2018 ஓகஸ்ட் 28 , மு.ப. 02:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, அதன் தற்போதைய செயல்தலைவர் மு.க. ஸ்டாலின், இன்று (28) தெரிவுசெய்யப்படவுள்ளார். தலைவர் பதவிக்கு, வேறு எவரும் போட்டியிடாததன் காரணமாகவே, ஒருமனதாக அவர் தெரிவுசெய்யப்படவுள்ளார்.
தி.மு.கவின் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த முத்துவேல் கருணாநிதி, இம்மாதம் 7ஆம் திகதி காலமானதைத் தொடர்ந்து, தலைவர் பதவியில் வெற்றிடம் ஏற்பட்டது. அவருக்குப் பின் தலைவராக, அவரது மகனும் கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினருமான ஸ்டாலினே தெரிவாகுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
கட்சியின் பொதுக் குழுக் கூட்டம், இன்று (28) நடைபெறவுள்ளது எனவும், கட்சியின் தலைவர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்குத் தேர்தல் நடத்தப்படும் எனவும், கட்சியின் பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அப்பதவிகளுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில், தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு, தற்போதைய முதன்மைச் செயலாளர் துரைமுருகனும் மாத்திரமே, வேட்புமனுக்களை நேற்று முன்தினம் (26) தாக்கல் செய்தனர்.
கட்சியின் தலைவராக, 50 ஆண்டுகளாகப் பதவி வகித்த கருணாநிதியைத் தொடர்ந்து, கட்சியின் இரண்டாவது தலைவராக, ஸ்டாலின் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
51 minute ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
4 hours ago
4 hours ago