Freelancer / 2023 ஓகஸ்ட் 27 , பி.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் ஜாக்சன் வெலி பகுதியில் கறுப்பினத்தவர்கள் அதிகம் வசித்து வருகிறார்கள். இந் நிலையில் அந்த பகுதியில் உள்ள ஒரு கடைக்குள் வெள்ளை இனத்தவர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்து கறுப்பினத்தவர்களை குறி வைத்து சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இந்த தாக்குதலில் ஒரு பெண் உள்பட 3 கறுப்பினத்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் ஆப்பிரிக்க-அமெரிக்க வம்சாவளியை சேர்ந்தவர்கள் ஆவர். தாக்குதல் குறித்து தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவரை பிடிக்க முயற்சித்தனர். அப்போது துப்பாக்கி சூடு நடத்தியவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இனவெறி காரணமாக அவர் இந்த தாக்குதலை நடத்தியதாகவும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியில் இனவெறி வாசகங்கள் எழுதப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
5 hours ago